வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரம்: திமுக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது - டாக்டர் இராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


வன்னியர் உள் இட ஒதுக்கீடு பற்றி திரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை வெளியிடும் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கடும் கணடனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில் , "உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் உரிய தரவுகளை தமிழக அரசு திரட்ட வேண்டும். பொம்மையான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை வைத்துக்கொண்டு தவறான புள்ளி விவரம் வெளியிடப்படுகிறது. 

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம்  வழங்கப பட்டிருக்கிறது என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விவரங்களுக்கு, 2 மாதங்களுக்கு முன் இன்னொருவருக்கு வழங்கப்பட்ட விவரங்களை வழங்கியது திமுக அரசு.

ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லாமலேயே வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்றது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. திமுக அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது” என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Condemn to DMK Govt MK Stalin Vanniyar Reservation


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->