மெரினாவில் பெரும் பரபரப்பு: விரைந்த ஆம்புலன்ஸ், குழந்தைகள் உட்பட 20 பேர் மயக்கம்!
Air Show 2024 Chennai Marina
சென்னை மெரினாவில் விமானங்களின் பிரமாண்ட சாகச நிகழ்ச்சி துவங்கி நடந்து வருகிறது.
இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் 21 வருடங்களுக்கு பிறகு வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதில், சுகோய், ரபேல் உள்ளிட்ட 72 விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. தேஜஸ், டகோட்டா, ஹார்வர்ட், ரஃபேல் உள்ளிட்ட விமானங்கள் சீறிப் பாய்கின்றன.
இந்நிலையில், மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 20 பேர் மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மயக்கம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதே போல சென்னை விமான சாகசங்களை, பறக்கும் ரயில் நிலையங்களில் மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். வேளச்சேரி ரயில் நிலையத்தில் முண்டியடித்துக் கொண்டு மக்கள் திரண்டு உள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
மெரினா கடற்கரையில் லட்ச கணக்கில் மக்கள் திரண்டு இந்த சாகச நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Air Show 2024 Chennai Marina