இடிமுழுக்கத்துடன் வானை பிளக்க வைத்த ரபேல் விமானங்கள்!....மெரினாவில் கடல் அலையை மிஞ்சிய மக்கள் கூட்டம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள  மெரினா கடற்கரையில் 'ஏர் ஷோ 2024' என்ற பெயரில்  முதல்முறையாக விமான சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்திய விமானப்படையின் நிறுவன தினம் வரும் 8-ம் தேதி கொண்டாடபட உள்ள நிலையில்,  கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று இந்த சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விமான சாகசத்தில் ரபேல், தேஜஸ், சூகோய் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானங்கள் பங்கேற்றன. அதுமட்டுமல்லாமல் ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் காட்சி குழுவும் வான்வழி சாகசங்களை நிகழ்த்தினர்.

முதலாவதாக, ஆகாஷ் கங்கா குழுவினர், 2000 அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

தொடர்ந்து எம்.ஐ.,17 ஹெ லிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சுகோய்-30 எம்.கே.ஐ., ரபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போன்ற போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தது.

சேத்தக் ஹெலிகாப்டர்கள் மூவர்ண தேசியக்கொடியை பறக்கவிட்டப்படி வானை அதிர வைத்த நிலையில், தஞ்சையில் இருந்து புறப்பட்ட ரபேல் விமானங்கள் சென்னை மெரினா கடற்கரையை வலம் வந்தது. அதுமட்டுமல்லாமல் இடிமுழுக்கத்துடன் ரபேல் விமானங்கள் பறக்க பறக்க கடற்கரையில் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் கடல் அலையை விட மிஞ்சும் அளவிற்கு பொது மக்கள்  நீண்ட வரிசையில் குடை பிடித்து காத்திருந்து, வானில் நிகழ்ந்த சாகச நிகழ்ச்சிகளை ரசித்தனர்.


இதன் காரணமாக நேற்று மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றும்  சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rafale planes that split the sky with thunder the crowd exceeded the sea wave in the marina


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->