ஹரியானாவில் தொடங்கியது வாக்குப்பதிவு : ஒரே கட்டமாக 90 தொகுதிகளுக்கு இன்று தேர்தல்! - Seithipunal
Seithipunal


ஹரியானாவில்  நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனையொட்டி ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு  ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் . 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 1,031 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
வாக்குப்பதிவிற்காக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையேயான  தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நீடித்து வந்த நிலையில், சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், அரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.  தொடர்ந்து அடுத்தடுத்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
அதன் படி இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.

 இதேபோல் பாஜகவும் தனித்து போட்டியிடும் நிலையில், லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Polling started in haryana elections for 90 constituencies in one phase today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->