பிரியங்கா காந்தி கணவரின் சொத்து கணக்கு போலி! - பாஜக பரபரப்பு குற்றாச்சாட்டு! - Seithipunal
Seithipunal


இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது. மேலும் அதே நாளில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும்  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி அங்கு நவம்பர் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை முன்னிறுத்துவதில் தீவிரம் கட்டி வருகின்றனர்.

இதற்கிடையே  வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாத்ராவிடம், 37.9 கோடி ரூபாய் அசையும் சொத்துக்களும், 27.64 கோடி ரூபாய்க்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக  குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நில ஊழல் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராபர்ட் வாத்ரா, 75 கோடி ரூபாய் அளவுக்கு வரி செலுத்த வேண்டி உள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா குற்றம் சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka gandhi husband property account is fake bjp allegation of sensationalism


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->