தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்த உதயநிதி பதவி விலக வேண்டும் - திருப்பி அடிக்கும் பாஜக! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து முறையின்றி பாடப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

'திராவிடம், திராவிடம்' என்று சொல்லி திட்டமிட்ட ரீதியில் தமிழை அழிக்க துடிக்கும் திமுகவின் கனவு பலிக்காது. 'என் இனிய தமிழ் மொழியை' அதிகாரத்தை கொண்டு அழித்து விடலாம் என நினைத்தால் அதை எதிர் கொண்டு தமிழ் மொழியை காப்போம். 

ஆங்கில மோகத்தில் திளைத்திருக்கும் இவர்கள்,  தமிழ்த்தாய் வாழ்த்தில் தமிழின் புகழை மறைக்க 'புகழ்' என்ற சொல்லை நீக்கி 'திகழ்' என்று பாட வைத்திருப்பதும், திராவிட நல் திருநாடும் என்பதில் 'திருநாடும்' என்ற சொல்லையும்  நீக்க வைத்து தமிழ் தாய் வாழ்த்தை சிறுமைப்படுத்தி விட்டனர். 

இதன் மூலம் தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்து, அவதூறு செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.பாஜக வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தமிழ்த்தாய் வாழ்த்தை திமுகவால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. 

தமிழ்நாட்டில் ஆங்கிலத்தை திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்கின்றனர் இவர்கள். நேரடியாக ஆங்கிலத்தை திணிக்க முடியாததால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர். ( கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படி தான் உதயநிதி பொங்கியெழுந்து கூறினார்)

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் தமிழ் தாய் வாழ்த்தில் ஒரு வரியை பாட மறந்த போது, அது ஆளுநரால் திட்டமிட்டு நடைபெற்றது என்று குற்றம் சாட்டியதோடு, அவரை நீக்க வேண்டும் என்றும் விலக வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கோரியிருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்ட விழாவில் இந்த அதிர்ச்சி தரும் வகையில் தமிழ் தாய் வாழ்த்தை சிறுமைப் படுத்தும் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. 


 

ஆளுநரை நீக்க வேண்டும் என்று சொன்னவர்கள், உதயநிதி ஸ்டாலின் தமிழுக்கு அவமரியாதை செய்து விட்டார் என்று விமர்சனம் செய்து அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க குரல் கொடுப்பார்களா? அல்லது தமிழை அவதூறு செய்ததற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா?

துணை முதல்வரா? ஆரியநரா? புகழ் என்ற சொல்லை நீக்கி திகழ் என்று சொல்லி தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாக ஆகாதா சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.

ஆங்கிலத்தை கொண்டாடும் மோகத்தில் நாட்டின் ஒருமைப்பாட்டையும், இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் துணை முதல்வர்! தமிழ் ஒவ்வாமையால் அவதிப்படும் துணை முதல்வர் அவர்கள், தமிழின் புகழை விட்டு விட்டுப் பாட சொல்வாரா?

தமிழ் நாட்டையும் - தமிழ்நாடு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே அவமதித்து வரும் துணை முதல்வரை தமிழக முதல்வர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan condemn to DyCM Udhay Thamizh Thai Vazhthu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->