நாடாளுமன்ற கூட்டத் தொடர் : சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்த திமுக திட்டம்!
Project to conduct caste wise census tr balu sensational interview
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மேலும், நவம்பர் 26-ம் தேதியான நாளை அரசியலமைப்பு தினத்தின் 75-வது ஆண்டு விழா நாடாளுமன்றத்தின் பழைய மைய மண்டபத்தில் கொண்டாடப்பட உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அந்த வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதான குழு அறையில் காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் கூடியது. இதில், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ், திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அதானி மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள லஞ்ச புகார் தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
மேலும், வட இந்தியாவில் நிலவும் காற்று மாசுபாடு மற்றும் ரயில் விபத்துகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவை குழு தலைவருமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசுவதற்கு 11 பிரச்சினைகளை எடுத்து வைத்திருப்பதாகவும், இதில் சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கிறது என்றும், அதனால் இட ஒதுக்கீடு பிரச்சினைகளை சரி செய்ய முடியும் என்றும் கூறினார்.
English Summary
Project to conduct caste wise census tr balu sensational interview