"புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி நாடாளுமன்றத்தில் புதுச்சேரி எம். பி. க்கள் குரல் கொடுக்க வேண்டும்" - புதுவை முதல்வர் ரங்கசாமி..!! - Seithipunal
Seithipunal


"மாநில அந்தஸ்து இல்லாதது தான் புதுச்சேரி மாநில நிர்வாக சிக்கல்களுக்கு காரணம். புதுச்சேரி எம். பி. க்கள் நாடாளுமன்றத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி குரல் கொடுக்க வேண்டும்" என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் பேசியுள்ளார். 

புதுச்சேரி சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, "ஆளுநர் உரை என்பது எப்போதும் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நடப்பு ஆண்டில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்தும், அதற்கான ஆலோசனைகள் குறித்தும் தான் இருக்கும். அதே போல் தான் இந்த ஆண்டும் ஆளுநர் உரை அமைந்துள்ளது. 

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சட்டசபையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தினர். எம். எல். ஏ. க்கள் மட்டுமல்லாது புதுச்சேரி மக்களும் அதைத் தான் விரும்புகின்றனர். கடந்த முறையே இதுகுறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம் மத்திய அரசு நிச்சயமாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரும் என்று நம்புகிறோம். 

மாநில அந்தஸ்து இல்லாததால் ஆளுநரிடம் ஒப்புதல் பெறாமல் எந்த திட்டத்தையும் அரசால் அமல்படுத்த முடியவில்லை. அரசு அனுப்பும் ஒவ்வொரு கோப்பும் இளநிலை எழுத்தர் முதல் தலைமைச் செயலர் வரை அனைவரும் அவரவர் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். 

இத்தகைய பல்வேறு சிரமங்களுக்கிடையே தான் புதுச்சேரி மாநிலத்தின் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதுகுறித்து புதுச்சேரி எம். பி. க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். ஆட்சிப் பொறுப்பில் இருந்து பார்த்தால் தான் இதிலுள்ள சிரமங்கள் தெரியும்" என்று பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudhucheri CM Rangaswamy Speaks about StateHood For Pudhucheri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->