அங்கன்வாடி ஊழியர்களுக்கு இரண்டு சம்பளம் - வாக்குறுதியை வாரி இரைத்த ராகுல் காந்தி.! - Seithipunal
Seithipunal


ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலின் 6வது கட்ட வாக்குப்பதிவு வருகிற 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராகுல் காந்தி பிரயாக்ராஜில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் இணைந்து தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் உஜ்வல் ராமனை ஆதரித்து பேசினார்.

அதாவது, "உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும், அந்தத் தொகுதி பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி மட்டும்தான். இந்த மக்களவைத் தேர்தல் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். எந்த சக்தியாலும் அரசியலமைப்பைக் கிழித்து எறிய முடியாது.

பண்ணை விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நாங்கள் ஒரு சட்டத்தை உருவாக்க இருக்கிறோம். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தின் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தி தரப்படும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் தரப்படும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். படித்த ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வேலை உறுதி செய்யப்படும். ராணுவத்தில் மீண்டும் பழைய ஆள்சேர்ப்பு நடைமுறை கொண்டுவரப்படும்" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragulgandhi speech in election campaighn


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->