துரோணாச்சாரியர் ஏக்லைவனின் விரலை வெட்டியது போல... பாஜகவை தெறிக்கவிட்ட ராகுல்காந்தி!
Rahulgandhi Parliament speech BJP MODI
மக்களவையில் நடைபெற்ற அரசியல் சாசன விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையில், "பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தவாதியாகக் கருதப்படும் சாவர்க்கர், இந்திய அரசியல் சாசனத்தை கடுமையாக விமர்சித்தார். இந்திய அரசியல் சாசனத்தில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், அதற்கு பதிலாக மனுஸ்மிருதியை ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்," என்றார்.
"சாவர்க்கரின் கருத்துக்கள் எவ்வாறு இருந்தன என்பதை விளக்கும்போது, அவர் மனுஸ்மிருதியை வேதங்களுக்குப் பிறகு மிகவும் மதிக்கத்தகுந்த வேதமாகக் கருதினார். இது நமது கலாச்சாரத்துக்கும் பழக்கவழக்கங்களுக்கும் அடிப்படையாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க வேண்டும் என பேசும் பாஜக, சாவர்க்கரின் பார்வைக்கு எதிராக செய்கிறார்கள்," என ராகுல் குறிப்பிட்டார்.
சாவர்க்கர் குறித்து எனது பாட்டி இந்திரா காந்தியிடம் கேட்டபோது, அவர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களுடன் சமரசம் செய்து மன்னிப்பு கேட்டார் என கூறினார்," என்றார்.
"துரோணாச்சாரியர் ஏக்லைவனின் விரலை வெட்டியது போல, பாஜக இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாகியுள்ளது. தாராவியை அதானிக்குக் கொடுப்பதன் மூலம் சிறு வணிகர்களின் உரிமைகளை குலைக்கிறது," என்றும் ராகுல் பேசினார்.
பாலியல் குற்றங்கள் மற்றும் விவசாய பிரச்சனைகளில் மத்திய அரசின் செயல்திறன் குறைவாக உள்ளது என்றும், அவற்றுக்கு இனி "இண்டி கூட்டணி" தீர்வுகாணும் என தெரிவித்தார்.
English Summary
Rahulgandhi Parliament speech BJP MODI