சென்னை மழை வெள்ளம்!...அதிமுகவை சரமாரியாக தாக்கிய அமைச்சர் சேகர் பாபு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த கனமழை பெய்தது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதில், சென்னையில் சில பகுதிகளில் மட்டுமே மழை நீர் தேங்கி நின்ற நிலையில், அவை சரி செய்யப்பட்டது. இருந்த போதிலும் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அனைவரும் விளையாட்டுப் பிள்ளை என்றே நினைத்தார்கள் என்றும், ஆனால் அதற்கு மாறாக, களத்தில் யார் எதிர்த்து நின்றாலும் வெற்றி தனக்கே சொந்தம் என்பதுபோல் இன்று தமிழக அரசியல் களத்தில் உதயநிதி ஸ்டாலின் உலாவிக் கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஏதாவது ஒரு இடத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டாரா என்று கேள்வி எழுப்பிய சேகர் பாபு, சென்னையில் அ.தி.மு.வைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். இருந்த போதிலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட அ.தி.மு.க.வினர் எங்கும் செல்லவில்லை என்று கடுமையாக சாடினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rain floods in chennai minister sekar babu attacked aiadmk


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->