உலுக்கும் அதிர்ச்சி!...கள்ளசாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் மாவட்டம் மற்றும் சரண் மாவட்டத்தை சேர்ந்த சிலரும் உள்ளூரில் உள்ள கடை ஒன்றிற்கு சென்று, கள்ளச் சாராயம் குடித்த நிலையில்,  49 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில், நேற்று நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.


இதற்கிடையே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 16 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. இதனை தொடர்ந்து இன்று மதிய நேர நிலவரப்படி,  மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A shocking the number of deaths due to drinking alcohol has increased to 28


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->