மதுவை விற்கும் அரசுக்கு பட்டாசு கடை அமைக்க முடியாதா? - தமிழக அரசுக்கு நீதிபதி தண்டபாணி கேள்வி! - Seithipunal
Seithipunal


தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு தடை விதித்த உத்தரவை மீறியதாக சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுற்றுலாத் துறை செயலாளர், சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா? என்று தமிழக அரசு வழக்கறிஞரை நோக்கி நீதிபதி தண்டபாணி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், காரணமில்லாமல் அரசை குறை கூற வேண்டாம். மவுனமாக இருக்க முடியாது என்று தெரிவித்தார். 

ஏற்கனவே, தமிழக அரசு வழக்கறிஞர் வில்சனுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கடுமையான கண்டனத்தை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai High court condemns to tn government


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->