கார்கே மற்றும் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த ராஜ்நாத் சிங் !!
Rajnath Singh Called Gharke and Stalin
மத்திய அமைச்சர் பாதுகாப்பு ராஜ்நாத் சிங் தலைமையில், புதிய மக்களவை சபாநாயகர் தேர்வு செய்வது குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க எதிர்க்கட்சிகளுடன் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் முக்கிய மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர், செயல்முறைக்கு திட்டமிடப்பட்ட நாளான இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார்.
பாஜகவின் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
இன்று அதே நேரத்தில் துணை சபாநாயகர் பதவிக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிவித்த அவர்கள், எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து அது அமையும் என்றும் தெரிவித்தனர்.
முந்தைய மக்களவையில் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவின் பெயரை தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் பரிந்துரைத்தது ஆனால் அதற்க்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. இது போன்று சிக்கலான சூழ்நிலை நீடித்து வரும் நிலையில், மேலும் மூன்று பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பாஜகவினர் தெரிவித்தனர்.
எல்லாம் திட்டமிட்டபடி, எதிர்க்கட்சிகள் ஓம் பிர்லாவைத் தொடர்வதை எதிர்க்கவில்லை என்றால், பிர்லா தொடர்வதற்கான வாய்ப்பு அதிகம். கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பாஜகவின் பீகார் மாநில எம்பி ராதா மோகன் சிங் அல்லது ராஜஸ்தான் மாநிலம் பாலி தொகுதியின் எம்பி சௌத்ரி, லோக்சபா சபாநாயகர் பதவிக்கான என்டிஏ வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று பாஜகவினர் தெரிவித்து உள்ளனர்.
English Summary
Rajnath Singh Called Gharke and Stalin