#Breaking || மாநிலங்களவை தேர்தலல்..திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!
Rajyasabha election DMK candidate announced
மாநிலங்களவையில் தமிழகத்தை சேர்ந்த திமுக எம்.பி-க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அதிமுகவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவி காலம் நிறைவடைகிறது.
காலியாக போகும் இந்த ஆறு இடங்களுக்கும் அடுத்த மாதம் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் ஒரு எம்பி வெற்றி பெற 34 எம்.எல்.ஏ-க்களின் வாக்குகள் தேவைப்படும். தமிழக சட்டமன்றத்தில் திமுகவுக்கு 159 எம்.எல்.ஏ-க்கள் உள்ளதால் 4 எம்.பி-க்கள் திமுகவுக்கு கிடைக்கும்.
இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவித்துள்ளார். திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், கே ஆர் என் ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
English Summary
Rajyasabha election DMK candidate announced