அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு.. கோபத்தில் மேடையில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ்.. அரங்கம் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடக்கி நடந்து வருகிறது. 2,665 பேர் பங்கேற்கும் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு எடப்பாடி கே பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் வந்தனர்.

அப்போது இரட்டை தலைமை வேண்டாம்... ஒற்றை தலைமை வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்நிலையில், 23 தீர்மானங்களையும் கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுடைய பார்வைக்கு வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள், நிராகரிக்கிறோம்.. நிராகரிக்கிறோம்.. என்று எதிர்த்தனர்.

அப்போது ஆவேசமாக எழுந்துவந்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், "நிராகரிக்கிறோம்... அனைத்து பொதுக்குழு தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம்... அனைத்து தீர்மானங்களையும் இந்தப் பொதுக்குழு நிராகரிக்கிறது... நிராகரிக்கிறது... நிராகரிக்கிறது... என்று சொல்லி ஆவேசமாக உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, இந்தப் பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிக்கிறோம். அடுத்து எப்போது பொதுக்குழு கூட்டம் கூட்டப்படுகிறதோ, அப்போது அதிமுக ஒற்றை தலைமை என்ற தீர்மானத்தோடு சேர்த்து இந்த பொது தீர்மானங்களை ஆதரிக்க தயாராக இருக்கிறோம் என்று கேபி முனுசாமி பேசினார்.

ஒற்றை தலைமையோடு அடுத்த பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என்றும் கேபி முனுசாமி பேசியுள்ளார் அனைத்து தீர்மானங்களையும் இந்தப் பொதுக்குழு நிராகரிக்கிறது என்று எப்போது ஒற்றை தலைமை தீர்மானம் ஒப்புக் கொள்ளப்படுகிறது அப்போதுதான் மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் பொதுக்குழுவில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார். சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் வைத்திலிங்கம் கோஷமிட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் பொதுக்குழு மேடையில் இருந்து வெளியேறிய வைத்திலிங்கம் தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையில் இருந்து வெளியேறினர். அதிமுக பொதுக்குழுவில் இருந்து வெளியேறிய ஒ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் வந்த பிரசார வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதனைத்தொடர்ந்து பரபரப்பான சூழலில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நிறைவுபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rejection of all resolutions OPS leaving the stage in anger


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->