எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்களில் முக்கிய தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார்.!  - Seithipunal
Seithipunal


வருகின்ற 2020 ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் பிரதமராகும் எண்ணம் இல்லை என்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத்குமார் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மக்களவை பொதுத் தேர்தல்களில் பாஜக பெரும்பான்மையான இடங்கைகளை கைப்பற்றி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அரசியல் வியூன்களை செயல்படுத்தி வருகின்றன.

ஆனால், தற்போது எதிர்க்கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை இல்லாததால், பல பிரதமர் வேட்பாளர்கள் ஆங்காங்கே தோன்றியுள்ளனர். குறிப்பாக ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சரத்பவார், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல பெயர்கள் பிரதமர் வேட்பாளருக்கு அடிபடுகிறது.

இதில் காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டுவிட்டு மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக களமிறங்கி தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்குமார் ஒரு பேட்டியளித்திருந்தார்.

மேலும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், "எதிர்க்கட்சிகளுக்கு தலைமை வகிக்கும் உரிமை காங்கிரசுக்கு தாரைவார்க்கவில்லை" என்று கருத்து தெரிவித்து இருந்தது, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பிரபல நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தான் பிரதமராக மாட்டேன், அரசாங்கத்தை வழி நடத்துவதை விட, அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் நபரை ஆதரித்து வழி காட்ட விரும்புகிறேன்" என்று தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarath bhavar say about pm candidate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->