"ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்" - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!
Science has eradicated a thousand years of ignorance Chief Minister M.K Stalin
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் பெயர்களில் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” - எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ் நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்! ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்! இன்று மாலை பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Science has eradicated a thousand years of ignorance Chief Minister M.K Stalin