அதிமுக கூட்டணியில்.. திண்டுக்கல் SDPI வேட்பாளர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


அதிமுக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை மண்ணடியில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திண்டுக்கல் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநில தலைவர் முகமது முபாரக் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட போவதாக ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SDPI state president mubark contest in Dindigul


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->