சீமானுக்கு விஜய் மேல் பயம்!...நிரந்தர வாக்குகள் கிடையாது!
Seeman is afraid of vijay there are no permanent votes
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மாநாட்டில் இருந்த உத்வேகம், தேர்தலை சந்திக்கும் அளவுக்கு செல்லுமா என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காரைக்குடியில் சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது கொள்ளையை தெளிவாக, வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் , மேலும் அவரது மாநாட்டில் உத்வேகம் இருந்ததாக தெரிவித்தார்.
மேலும், அந்த உத்வேகம் அமைப்பாக மாறி, தேர்தலை சந்திக்கும் அளவுக்கு செல்லுமா என்று கேள்வி எழுப்பிய அவர், அதனை காலம் தான் சொல்லும் என்றும், சாதுரியமாக அல்லது பிம்பத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பார்களா என்பதை பார்க்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசியல் கட்சியின் செயல்பாடு, நடத்தை, கொள்கை போக, போக தான் தெரியும் என்றும், சீமான் கட்சிக்கு நிரந்தர வாக்குகள் கிடையாது என்று கூறிய அவர், இதன் காரணமாக அவருக்கு யதார்த்தமான அச்சம் வந்துள்ளதாக விமர்சித்தார்.
English Summary
Seeman is afraid of vijay there are no permanent votes