செந்தில் பாலாஜி வழக்கு || ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது.! சிறப்பு நீதிமன்ற நீதிபதி திட்டவட்டம்!!
SpecialCourt said that SenthilBalaji bail plea cannot be heard
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுடன் அவருடைய நீதிமன்ற காவல் நிறைவடைவதால் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி அமர்வின் முன்பு நேரில் ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதானா விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவரை தற்போது ஜாமினில் விடுவித்தால் சாட்சியங்களையும், சாட்சிகளையும் கலைக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
அதே நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும் எனவும், வழக்கின் சாராம்சங்களை மேற்கோள் காட்டி செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ வாதங்களை முன் வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரவி வழக்கானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஜாமின் வழங்க முடியாது எனவும், அதனையும் மீறி ஜாமீன் மனு தாக்கல் செய்தால் அதனை விசாரிக்க முடியாது எனவும், ஜாமீன் வேண்டுமென்றால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடி செந்தில் பாலாஜி தரப்பு பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதி ரவி தனது உத்தரவில் தெரிவித்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
English Summary
SpecialCourt said that SenthilBalaji bail plea cannot be heard