நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டம்! பம்மல் மாநகர் சபையில் ஸ்டாலின் பங்கேற்பு! - Seithipunal
Seithipunal


கிராம சபை கூட்டங்கள் ஆண்டுதோறும் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கூடுதலாக நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என மு க ஸ்டாலின் சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அந்தந்த ஊராட்சிகளின் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத் திட்டங்கள் மற்றும் அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் எனவும், கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கிராம சபை கூட்டங்களில் மக்களின் குறை கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது போல் நகரம் மற்றும் மாநகரங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறை கேட்டு அதற்கான தீர்வுகள் காண அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தமிழக வரலாற்றிலேயே இது முதல்முறையாக நடைபெறும் நிகழ்வு ஆகும். 

இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் 6வது வார்டில் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் மாநகர சபை கூட்டத்திற்கு ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகளும், திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin participate City Council in Pammal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->