கொஞ்சம் டைம் வேணும்!! ஒரு வாரம் எடுத்துக்கோங்க!! நீதிபதிகளால் செந்தில் பாலாஜி தரப்பு ஷாக்!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு கடந்த அக்டோபர் 19ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது சென்னை உயர்நீதிமன்றத்தால் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே செந்தில் பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதோடு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே கவுல் தலைமையிலான அமர்வு அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும், இந்த வழக்கை அக்டோபர் 30ஆம் தேதி (இன்று) வேறொரு அமர்வு விசாரிக்கும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமர்வு அறிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அமர்வின் முன்பு அக்டோபர் 30 ஆம் தேதி (இன்று) செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பட்டியலிட்டப்பட்டதை அடுத்து ஜாமின் மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் தொடங்கியது.

அப்போது செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சிறிது நேரம் கால அவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் சங்கர் "மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

அதற்கு நீதிபதிகள் அவசர வழக்கு என்றால் எதிர் தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்து செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததை உறுதி செய்தனர். 

வழக்கு விசாரணையை சிறிது நேரம் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததற்கு ஒரு வார காலம் வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தது செந்தில் பாலாஜி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court adjourned Senthil Balaji bail case to Nov6


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->