ஜாமீன் வழக்கு; செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்; 10 நாளில் பதிலளிக்க உத்தரவு..!
Supreme Court condemns Senthil Balaji in bail case
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவிற்கு 10 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று நீதிபதி அபய்.எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் இந்த மனு மீதான விசாரணை வந்தது. இதன் போது செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கு தொடர்பாக, விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம், அதற்கு இரண்டு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

நீதிபதிகள் தரப்பில், நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றவுடனேயே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானார். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்னும் அவர் உரிய பதிலை அளிக்கவில்லை. ஆகவே அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்றும், தொடர்ந்து இது போல பதில் அளிக்காமல் இருப்பது ஏற்புடையது அல்ல என்றும் கூறப்பட்டது.
அத்துடன், இது தொடர்பில் 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதிலளிக்க வேண்டும் என்றும் மேற்கொண்டு எந்தவித கால அவகாசமும் அளிக்கப்படமாட்டாது என்றும் திட்டவட்டமாக நீதிபதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Supreme Court condemns Senthil Balaji in bail case