இடஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


அரியானா மாநிலத்தில் உள்ளூர் மக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், தனியார் நிறுவனங்களில் 75 சதவீத பணிகளை இட ஒதுக்கீடு வழங்கி, அம்மாநில அரசு கொண்டு வந்த சட்டத்தை, அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, தற்போது ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலங்களுக்கு திரும்பி சென்றனர். இதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கடுமையான சிக்கல் ஏற்பட்டது.

மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்று வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் பல மாநிலங்களில் தனியார் தொழில் நிறுவனங்களில் வெளிமாநில பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது.

இதன் காரணமாக உள்ளூர் நபர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருவதாக எண்ணி, ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநில மக்களுக்கு அதிகப்படியான தனியார் நிறுவனங்களில் வேலைகளை வழங்க வேண்டும் என்று உத்தரவுகளை பிறப்பித்து வந்தன.

அந்தவகையில், அரியானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், அரியானா மாநிலத்தை சேர்ந்த நபர்களை 75% வேலையில் அமர்த்த வேண்டும் என்ற ஒரு இட ஒதுக்கீட்டை சட்டமாக்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அம்மாநில உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அரியானா மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

supreme court judgement for private job reservation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->