அதிரடி! இன்று தமிழ்நாட்டின் அமைச்சரவை கூட்டம்!!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார்?
Tamil Nadu cabinet meeting today What Chief Minister MK Stalin going to say
தமிழ்நாட்டில் தி.மு.க கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது வரை 3 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 2025-26 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் தயாரிக்கும் பணி தீவிரமாக உள்ளது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப்பணி பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியில் அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டிற்கான பட்ஜெட் அடுத்த மாதம் மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்தப் பட்ஜெட் தாக்கலை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து மார்ச் 15-ம் தேதி வேளாண்மைப் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளன.

இன்று அமைச்சரவைக் கூட்டம்:
இந்நிலையில் இந்தத் தாக்குதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் 12 மணிக்குக் கூடுகிறது. இந்தப் பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் பெரும்பாலும் ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட நிலையில் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இன்னும் கூடுதலாக ஏதேனும் திட்டங்களை அமல்படுத்த முடியுமா? இன்னும் கூடுதல் திட்டங்களைக் கணக்கில் சேர்த்த முடியமா? என்பது குறித்து ஆலோசித்து அதையும் பட்ஜெட்டில் சேர்ப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பட்ஜெட்டில் வாக்குறுதி:
இதனையடுத்துத் தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டைத் தவிடு பொடியாக்கும் வகையில் தி.மு.க தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் வாக்குறுதிகளையும் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
English Summary
Tamil Nadu cabinet meeting today What Chief Minister MK Stalin going to say