விஜயின் 'ஜன நாயகன்'; தமிழ் புத்தாண்டில் வெளியாகும் புதிய அப்டேட்..!
New update on Jannayagan releasing on Tamil New Year
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இறுதியாக GOAT திரைப்படம் வெளியாகி னால வரவேற்பை பெற்றது. தமிழக வெற்றி கழகம் தலைவராக எதிர்வரும் 2026 தேர்தலை சந்திக்க இருக்கிறார். இந்நிலையில், அவரின் இறுதி படமான 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார்.
இந்த படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகி, வைரலாகின. ஜனநாயகம் தலைப்பை போன்றே படமும் அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படம் பற்றிய புதிய தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
New update on Jannayagan releasing on Tamil New Year