மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... ஆசிரியர் கைது!
Again a shocking incident. Sexual harassment of students... Teacher arrested!
7-ம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பிரபு மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சமீபகாலமாக பாலியல் சீண்டல் அதிகரித்துக்கொண்டு செல்கிறது.குறிப்பாக பள்ளி மாவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஓன்று செயல்பட்டு வருகிறது . இந்த பள்ளியில் ஊத்தங்கரையை சேர்ந்த பிரபு என்பவர் தற்காலிக ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், 7-ம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளுக்கு பிரபு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது . மேலும் இது தொடர்பாக ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகள், நேற்று குழந்தைகள் உதவி மற்றும் புகார் எண்ணுக்கு புகார் அளித்தனர்.
அப்போது புகாரின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குழுவினர் சம்பவம் நடந்த அரசுப்பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இதில், மாணவிகளுக்கு ஆசிரியர் பிரபு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் இது தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பிரபு மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Again a shocking incident. Sexual harassment of students... Teacher arrested!