ட்ரைலர் இதோ!!! திகில் ஊட்டும் அமானுஷ்யம் நிரம்பிய மர்மர் படம்!!!
trailer here The horror filled supernatural thriller movie
ஹேமந்த் நாராயணன் இயக்கத்தில் "மர்மர் " படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இத்திரைப்படமானது தமிழில் உருவாகியுள்ள முதல் found footage horror திரைப்படம் ஆகும். Found footage ஹாரர் திரைப்படங்கள் என்றால் திரைப்படத்தில் வரும் காட்சிகள் பெரும்பாலானவை டேப் ரெக்கார்டர், சிசிடிவி கேமரா ஃபுட்டேஜ் போலவே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலமாக அந்த அமானுஷ்ய சம்பவங்களை உண்மை போலவே பார்ப்பவர்களை உணர வைக்க இது போன்ற காட்சிகள் படத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். மேலும் இப்படத்தை ஸ்டாண்ட் அலோன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ரசிகர்களை ஈர்க்க ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் "கபா கபா கபிஸ்து" என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

"மர்மர் " horror திரைப்படம்:
மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஜேசன் வில்லியம் மற்றும் படத்தொகுப்பை ரோகித் செய்கிறார். இந்தத் திரைப்படம் வரும் மார்ச் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் மர்மர் படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் காட்சிகள் முழுமையாக மர்மம் நிறைந்ததாகவே அமைந்துள்ளது. இதில் நண்பர்கள் கூட்டம் சேர்ந்து ஒரு கிராமத்தில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களைப் பதிவு செய்வதற்காக செல்கின்றனர். அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களில் இவர்கள் மாட்டிக் கொள்வதுப்போல ட்ரெய்லர் காட்சிகள் அமைந்துள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் காட்சிகள் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது.
English Summary
trailer here The horror filled supernatural thriller movie