#சேலம் - மேட்டூர் || 227வது முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்த பிரபலம்.!
therthal mannan padmarajan in local body election 2022
'தேர்தல் மன்னன்' என்றழைக்கப்படும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்மராஜன் 227வது முறையாக இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன். 62 வயதாகும் இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, கடந்த 1988ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறார்.
கிட்டதட்ட 30 ஆண்டுகளாக எந்த தேர்தல் அறிவிப்பு வெளியானாலும், அந்த இடத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்வதை வாடிக்கையாக கொண்டு வருகிறார் இவர். சொல்ல வேண்டுமென்றால் கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில், அவர்களை எதிர்த்து இவர் வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இப்படியாக இவர் வேட்புமனு தாக்கல் செய்து லிம்கா புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருடைய அடுத்த ஒரே இலக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பது தான்.
இந்த நிலையில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, இன்று சேலம் மாவட்டம், வீரக்கல் புதூர் பேரூராட்சியின் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் பத்மா ராஜன். இது அவரின் 227 வைத்து வேட்புமனு ஆகும்.
மேலும், மேட்டூர், தாரமங்கலம் நகராட்சிகளிலும் இவர் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக தேர்தல்களில் போட்டியிட்டு வரும் பத்மராஜன் பழைய லாரி மற்றும் பேருந்து டயர்களை புதுப்பிக்கக்கூடிய தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை அவர் பெற்ற அதிகபட்ச வாக்காக, கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்ட இவருக்கு 6 ஆயிரத்து 273 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
therthal mannan padmarajan in local body election 2022