இனி ஒரு லட்சம் ரூபாய்... தமிழக அரசு பிறப்பித்த அரசாணை! - Seithipunal
Seithipunal


ஊர்க்காவல் படையில் பணியாற்றும் காவலர்கள் பணியில் மரணம் அடைந்தால் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ₹15 ஆயிரத்தில் இருந்து ₹1 லட்சமாக  உயர்த்தப்பட்டுள்ளது.

காயமடைந்தால் வழங்கப்படும் தொகையும் ₹10 ஆயிரத்தில் இருந்து ₹50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஊர்காவல்படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள்
குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும்
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்கவேண்டும் குடும்ப அட்டை (Ration Card) வைத்திருக்கவேண்டும்
தேர்ச்சி செய்யப்படும் ஊர்காவல்படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி 1 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.

சலுகைகள் : சீருடை, தொப்பி, காலணி ஆகியவை வழங்கப்படும். 

இரவு ரோந்துபணி, பகல் ரோந்துபணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூ.560/-ம் சிறப்பு படியாக வழங்கப்படும். பெண்களுக்கு பகல் ரோந்து பணி மட்டுமே.

வெகுமதிகள்: சிறப்பாக மெச்சத் தகுந்த வகையில் பணிபுரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையின் கீழ் வழங்கப்படும்.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் 14.11.2024 முதல் இலவசமாக பெற்று பூர்த்திசெய்து 23.12.2024 மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.

முகவரி:
சென்னை பெருநகர ஊர்காவல்படை அலுவலகம்,
சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை - 15.
தொலைபேசி:94981 35190, 95667 76222
“சேவைமனம் கொண்டயாவரும் ஊர்காவல்படையில் சேர்ந்து மக்களுக்கு தொண்டு செய்யலாம்”


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Home Gaurd TNGovt order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->