கொலை செய்யப்பட்ட கள்ளகாதலி! வசமாக சிக்கிய இரு கள்ள காதலங்கள்!  திருப்பத்தூரில் கொடூரம்! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, ஒரு பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணை துன்புறுத்தி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னணி:

சந்திரபுரம் பொன்னன் பகுதியை சந்தியா. இவரின் கணவன் பெங்களூரில் வேலை செய்து வந்துள்ளார். சந்தியா மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்துவந்த நிலையில், கடந்த 11ம் தேதி சந்தியா சடலமாக கிடந்துள்ளார்.  

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தியாவின் தொலைபேசியை ஆய்வு செய்ததில், விக்னேஷ் மற்றும் குமரேசன் ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

அதில், குமரேசன் கடந்த 7 ஆண்டுகளாக சந்தியாவுடன் தகாத உறவில் இருந்ததும், அவர் வெளிநாடு சென்றபோது சந்தியா விக்னேஷுடன் உறவில் இருந்ததும் தெரிய வந்தது.  

குமரேசன் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய பின், விக்னேஷுடன் இருந்த உறவை அறிந்து தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி இரவு, குமரேசன் சந்தியாவை அடித்து கழுத்தை நெரித்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அவரை தொடர்ந்து விக்னேஷ் அடித்து துன்புறுத்த சந்தியா உயிரிழந்து உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் கைது செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupathur Illegal Affair Murder case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->