எங்களை எதிர்த்து போராடுனீங்க., தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தான் இங்கயும் நடக்கும்.! மக்களை மிரட்டும் ஆட்சியர், திமுக அமைச்சர்.!
THIRUVANNAMALAI SIPCOT ISSUE
கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் 10 இடங்களில் சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில் ஒன்றாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், பாலியப்பட்டு, ஆடையூர், தேவனந்தல், அய்யம்பாளையம், அஸ்வநாகசுரணை ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையினர் சில வாரங்களுக்கு முன் நில அளவையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு சிப்காட் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 25 நாட்களாக பாதிக்கப்படும் அந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஊருக்குள் கருப்புக்கொடி ஏற்றுவது, மறியல், கஞ்சித்தொட்டி அமைத்தல், காத்திருப்புப் போராட்டம் உள்ளிட்ட பல வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி வரும் உழவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்றும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை சுட்டிக்காட்டியும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மிரட்டி உள்ளதாக புகார்கள் வந்துள்ளது.
மேலும், பாலியப்பட்டு பகுதியில், யார் எதிர்த்தாலும் சிப்காட் வளாகத்தை அமைத்தே தீருவோம் என்று அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரும் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து, இன்று பாமக மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அறிக்கை : சிப்காட் தொழிற்பேட்டைக்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
THIRUVANNAMALAI SIPCOT ISSUE