பலபேருடன் பழக்கம்., கண்டித்த தாயை படுகொலை செய்த சிறுமி.!  - Seithipunal
Seithipunal


ஆண் நண்பர்களுடன் பழகுவதை கண்டித்ததால், பெற்ற தாயையே கழுத்து நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்த 17 வயது சிறுமியை போலீசார் அதிரடியாக இன்று கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி, வண்ணார் தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரின் மனைவி முனிய லட்சுமி. தம்பதிகள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, தனித்தனியே வசித்து வருகின்றனர். முனிய லட்சுமி தனது 17 வயது மூத்த மகள் உடன் வசித்து வருகிறார். 

இந்த நிலையில், முனிய லட்சுமி வீட்டில் இறந்து பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் முனிய லட்சுமியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், முனிய லட்சுமி இறந்தது குறித்து அவரின் மூத்த மகளிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் தகவல்களை தெரிவித்ததாக தெரிகிறது. இதனையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், முனிய லட்சுமி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அந்த பகுதியில் உள்ள பல நண்பர்களுடன் சிறுமி பழகி வந்ததாகவும், இதனால் தாய் அவரை கண்டிப்பதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து சிறுமி தன் ஆண் நண்பருடன் சேர்ந்து பெற்ற தாய் என்றும் பார்க்காமல் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

முனிய லட்சுமியை கொலை செய்ய சிறுமிக்கு துணையாக இருந்த ஆண் நண்பர்களை கைது செய்வதற்க்கு போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பெற்ற தாய் என்றும் பார்க்காமல் மகளே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thoothukudi 17 years old girl arrest in murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->