#BigBreaking:: #420மலையால் பாஜகவுக்கு கேடு... செந்தில்பாலாஜி உடன் பேரம்.. பாஜகலிருந்து விலகினார் நிர்மல்குமார்..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்!

என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவுமில்லை.

அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் வியாபாரம் ஆக்கி இடத்திற்கு ஏற்ப நடித்து மாறிவரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். 

தொண்டர்களை மதிக்காது தான்தோன்றித்தனம் இவற்றுடன் "மனநலம் குன்றிய" மனிதரைப் போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது. 2019இல் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை. அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றிவரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது.

அதை உணர்த்த முயன்று என்னைப் போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையாக சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீரா வேசமாக பேசிவிட்டு திரை மறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்? 

மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு மிகப்பெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்..?" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல்குமார் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைமுகமாக பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP IT state president Nirmal Kumar quits the party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->