#BREAKING:: பாஜகவில் இருந்து விலகிய சி.டி.ஆர் நிர்மல் குமார் அதிமுகவில் தஞ்சம்.!!
TN BJP ITwing state president Nirmal Kumar joined in AIADMK
தமிழ்நாடு பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் சற்று முன்னர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தனது அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தார்.
இதற்கான காரணத்தையும் தனது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார். அந்த அறிக்கையில் "கடந்த 2019ல் இருந்த கட்சி அமைப்பில் தற்பொழுது 20% கூட இல்லை. அதைப்பற்றி துளியும் கவலையில்லாமல் மாய உலகத்தில் சுற்றிவரும் ஒரு நபரால் கள யதார்த்தத்தை என்றும் உணர முடியாது.
மேலும் நான் ஒரு அமைச்சருடன் கடுமையாக சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்? மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சரையே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே பெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியினரை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் தமிழக பாஜகவில் இருந்து விலகிய அக்கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தற்பொழுது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதிமுக மற்றும் பாஜக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரை ஒரே கூட்டணியில் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக மாநில தலைவர் ஒருவர் அதிமுகவில் இணைந்திருப்பது கூட்டணியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
English Summary
TN BJP ITwing state president Nirmal Kumar joined in AIADMK