இதுவரை தமிழகம் காணாத ஒரு தேர்தல் : 11 முனை போட்டி., கள நிலவரம் எப்படி உள்ளது.!
tn local body election 2022 info
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி மாதம் 19 மாதம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வருகின்ற 4ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால், வேட்பாளர்களை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தலைப் பொருத்தவரை தமிழகத்தில் அதிமுக - திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
அதே சமயத்தில் இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய ஆறு கட்சிகளும் தனித்து களம் இறங்குகின்றன.
மேலும் நடிகர் விஜயின் 'விஜய் மக்கள் இயக்கம்' தனியாக வேட்பாளர்களை களமிறக்க உள்ளது. இதுமட்டுமில்லாமல் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் அனைத்து தொகுதிகளிலும் களமிறங்கவுள்ளனர்.
இது மட்டுமல்லாமல், பிரதான அரசியல் கட்சிகளில் சீட்டு கிடைக்காதவர்கள் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி உள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் நடைபெற ஒரு தேர்தலாக இந்த நடைபெற உள்ளது. மொத்தமாக பார்த்தால் 11 முனை போட்டியாக இந்த தேர்தல் நடக்க உள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கு வெற்றி., யாருக்கு தோல்வி., என்பதை கணிக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary
tn local body election 2022 info