ஆளுங்கட்சி பிரமுகர் போல உளறி கொட்டிய டிஜிபி சைலேந்திரபாபு.!
tn police dgp press meet
தமிழகத்தில் முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது 80% கொலை குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு ஆண்டுகளாக தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "நெல்லை பாதுகாப்பு பணியின் போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் உதவி காவல் ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவுக்கு, தமிழக முதல்வர் அவருக்கு ஆறுதல் கூறி, அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியதற்கு காவல்துறை சார்பாக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக கொலை குற்றங்கள் குறைந்துள்ளன. கடந்த ஆட்சியை விட, முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 80 சதவீதம் கொலைக் குற்றங்கள் குறைந்து உள்ளது.
முக்கியமாக தென் மாவட்டங்களில் பழிக்குப்பழி கொலை சம்பவங்கள் நடப்பது வழக்கம். ஆனால் கடந்த 8 மாதங்களாக அதுபோன்ற சம்பவங்கள் தற்போது நடைபெறவில்லை" என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி ஆளுங்கட்சி பிரமுகரின் பேட்டிபோல் உள்ளதாக சமூகவலைதங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அவர் கூறிய "கடந்த ஆட்சியை விட, டந்த 8 மாதங்களாக" ஆகிய வார்த்தைகள் ஆளும்கட்சி பிரமுகரின் அரசியல் வார்த்தைகள் என்று குறிப்பிடுகின்றனர்.