தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு 13 பேர் வேட்புமனு தாக்கல்.! யாருப்பா அந்த 7 பேர்?!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு அடைந்துள்ளது. இந்த 6 இடங்களுக்கான தேர்தலில் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அரசியல் கட்சி சார்பாக ஆறு பேரும், சுயேச்சையாக 7 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், கட்சி சார்பாக அதிமுகவை பொறுத்தவரை இரண்டு வேட்பாளர்களும், திமுக சார்பில் மூன்று வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களுக்கு முன்மொழிவதற்கான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால், அவர்களின் வேட்புமனு நாளை நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அதன்படி நாளை திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பாக போட்டியிட கூடிய 6 பேரின் வேட்பு மனு நாளை ஏற்கப்படும். மேலும், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த வெற்றி முடிவு வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn rajya sabha election nomination field


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->