பெட்ரோல் குண்டு வீச்சு | கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் கைது! - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து இதன் எதிரொலியாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

அந்த வகையில், திருப்பூர் அங்கீகரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் பாலகுமார் முன்பு தங்கியிருந்த வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மர்ம நபர்கள் தலைமறைவாகினர்.

பெட்ரோல் குண்டு சரியாக தீப்பற்றாததால் அசம்பாவிதங்கள் எதுவும் அரங்கேறவில்லை. இது குறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகார் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று சையது இப்ராஹீம் (20 வயது), கேரளாவை சேர்ந்த பெராஸ் கான் (32 வயது) ஆகிய இருவரை கைது செய்து, அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tripur Bjp Member home petrol bomb case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->