#தமிழகம் || உடைக்கப்பட்ட பெரியார் சிலை., கொந்தளிப்பில் டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கத்தில் நிறுவப்பட்டிருந்த ஈரோடு வேங்கடப்ப ராமசாமியின் சிலை இன்று சேதப்படுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலையை சேதப்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

அந்த அவ்வகையில், தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள கண்டணச்செய்தியில், "விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. 

இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dhinakaran say about evr statue damage in vilupuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->