புஷ்பா படத்தால் வந்த வினை; படத்தை பார்த்து மாணவர்கள் ஆபாசமாக பேசுகின்றனர்; தலைமை ஆசிரியர் வேதனை..!
Students are talking obscenely after watching the movie Pushpa Headmaster is upset
'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படம் கடந்தாண்டு டிசம்பர் 05 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநர் சுகுமார் -நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவான இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா ஜோடியாக நடித்திருந்தார். பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார்.
'புஷ்பா 2' முதல் நாளே 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் அதிக வசூலித்த இப்படத்தின் இந்த படத்தின் வசூலே அதிகமாகும். இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 ஒரு மைல் கல்லை தொட்டது.படம் வெளியாகி 02 மாதங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் ரூ. 1871 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், புஷ்பா 2 படத்தை பார்த்து மாணவர்கள் கெட்டு போயுள்ளதாக ஐதராபாத் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் புலம்பிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
கல்வி ஆணையத்துடன் நடந்த கலந்துரையாடலின் போது பேசிய ஆசிரியர், " அரசுப் பள்ளி மாணவர்களை கையாள்வது மிகவும் கடினமாகி வருகிறது. நான் பணி செய்யும் பள்ளியில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், புஷ்பா படத்தை பார்த்துதான் கெட்டுள்ளனர். அந்தப் படத்திற்கு எந்தவொரு பொறுப்புமின்றி சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஹேர்ஸ்டைலை வைத்துக்கொண்டு, ஆபாசமான முறையில் மாணவர்கள் பேசுகின்றனர். இதெல்லாம் பார்க்கையில் நானே தோற்பதுபோல உள்ளது" என்று தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
English Summary
Students are talking obscenely after watching the movie Pushpa Headmaster is upset