சிவ சிதம்பர ராமசாமி படையாச்சியாரை போற்றுவோம்., டிடிவி டிவிட்.! - Seithipunal
Seithipunal


சிவ சிதம்பர ராமசாமி படையாச்சியார் அவர்கள் 1918 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி பிறந்தார். இவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். மேலும் தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும், இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 

1952 தேர்தலில் ராமசாமி படையாட்சி வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954ல் காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமி அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். இன்றைய விழுப்புரம் மாவட்டத்தின் முந்தைய பெயரே எஸ். எஸ். ராமசாமி படையாச்சி மாவட்டம் என்று தான் இருந்தது.

1980 மற்றும் 1984 பொதுத்தேர்தல்களில் காங்கிரசு சார்பாக திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1992 ஆம் ஆண்டு மறைந்தார்.

தமிழக அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மக்கள் தொண்டாற்றிய எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

"தமிழக அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மக்கள் தொண்டாற்றிய திரு.எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த நாள் இன்று. சுதந்திர போராட்டத்தின்போதும், மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து போற்றிடுவோம்." என்று தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ttv say about ss ramasamy padayachi birth day


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->