த.வெ.க மாநாடு! சட்டரீதியிலான உதவி... விஜய் வெளியிட்ட பட்டியல்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கான, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விடுத்துள்ள அறிவிப்பில், "வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ள வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நமது கழகத்தின் சார்பில், கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு, மாநாட்டில் பங்கேற்கும் கழகத் தோழர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியில் உதவிடும் வகையில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாநாட்டிற்கான தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், அதனை ஒட்டியுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், மாநாட்டிற்கு வரும் கழகத் தோழர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாநாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் விவரம்:



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Manadu Vijay announce


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->