இரட்டை இலை சின்ன வழக்கின் முக்கிய சாட்சி தூக்கிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி இருந்தது. அப்போது நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் மூலம், தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவருக்குக் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது.

இது குறித்து டெல்லி காவல்துறை பதிவு செய்த வழக்கில், டிடிவி தினகரன், சுகேஷ்  சந்திரசேகர் கைது செய்யப்பட்டனர். இதில், டிடிவி தினகரன் அறுபத்தி ஒன்பது நாட்கள் திகார் சிறைச்சாலையில் இருந்தபின், அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி தொடுக்கப்பட்ட வழக்கில், ஏப்ரல் 8ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய சாட்சியான கோபிநாத் என்பவர், நேற்றிரவு தூங்கச் செல்வதாகக்கூறி வீட்டின் எதிரே உள்ள குடிசைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரது உடலை மீட்ட திருவேற்காடு காவல் துறையினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாளை டெல்லியில் ஆஜராக அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று அவர் தற்கொலை செய்து கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twin leaf simple case one witness suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->