#BREAKING:: " பாஜகவில் தொடரும் வெளியேறும் படலம்".. அதிமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள்..!!
Two more BJP executives joined in AIADMK
தமிழக பாஜகவின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவை சேர்ந்த மாநில செயலாளர் மற்றும் தாம்பரம் ஒன்றிய தலைவர் அதிமுகவில் ஐக்கியம்..!!
தமிழக பாஜகவில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டிய பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் அக்கட்சியிலிருந்து விலகிய நிலையில் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
அதே போன்று தமிழ்நாடு பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திலீப் கண்ணன் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அவரால் நடத்தப்படும் வாரம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் தமிழக பாஜகவில் இருந்து வெளியேறினார்.
அதேபோன்று பல முக்கிய நிர்வாகிகள் தமிழக பாஜகவில் இருந்து வெளியேறி வருகின்றனர். இவர்கள் அனைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். இதற்கு தமிழக பாஜக கடுமையான வார்த்தைகளால்செய்து வருகிறது
இந்த விவகாரம் தமிழக பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என அதிமுகவை எச்சரிக்கும் வகையில் நேற்று பேசியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படம் எரித்த விவகாரம் அதிமுக தொண்டர்களை கொந்தளிக்க செய்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக நேற்று இரவு நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர் கோவில்பட்டி டிஜிபி அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு இருக்கையில் தமிழக பாஜகவில் இருந்து மேலும் 2 நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதுகுறித்து சமீபத்தில் அதிமுகவில் இணைந்த சி.டி.ஆர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் "மாண்புமிகு கழக இடைக்கால பொதுச் செயலாளர் அண்ணன் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்த மாற்றுக் கட்சியினர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். லதா-பாஜக செயலாளர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு, வைதேகி-பாஜக ஒன்றிய தலைவர், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு, தாம்பரம்" என பதிவிட்டுள்ளார். நாளுக்கு நாள் தமிழக பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருவது பாஜக தொண்டர்கள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Two more BJP executives joined in AIADMK