#BREAKING || விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கு! தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Two sentenced to life in thoothukudi VAO murder case
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அடுத்த கோவில்பத்து கிராமத்தில் பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி மணல் கொள்ளையர்களால் அவரது அலுவலகத்தில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த படுகொலை சம்பவத்தை அரங்கேற்றிய ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் வருவாய்த்துறையினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதனால் தமிழக அரசு கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் பாதுகாப்புக்காக கை துப்பாக்கி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்ஸின் வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை படுகொலை செய்த குற்றவாளிகள் ராமசுப்பு, மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் சிறை மற்றும் 3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
English Summary
Two sentenced to life in thoothukudi VAO murder case