மசூதி-சிவலிங்கம்?! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு.!
Varanasi Gyanvapi Mosque case today hearing
வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இந்த மசூதியின் சுற்றுச்சுவரில் அமைந்துள்ள சிங்கார கௌரி அம்மன் சிலைக்கு தினமும் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி 5 பெண்களால் நீதிமன்றத்தில் மனு அளிப்பட்டது.
இது சம்மந்தமான அந்த வழக்கில், ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மசூதியில் வீடியோ பதிவுகளுடன் கள ஆய்வு செய்ய அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் குழு ஒன்றை நீதிமன்றம் நியமித்து இருந்தது.
அதன்படி, பலத்த பாதுகாப்புக்கு இடையே நேற்று வாரணாசி ஞானவாபி மசூதிக்குள் மூன்றாவது நாளாக வீடியோ பதிவுடன் ஆய்வு நடைபெற்றது.
வருகின்ற 17ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளதால், அஜய் குமார் மிஸ்ரா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்தக் கூடாது என்று மசூதி நிர்வாகத்தால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, இன்று விசாரணை நடைபெற உள்ளதாது.
முன்னதாக நேற்று மாலை ஞானவாபி மசூதிக்குள் உள்ள சுவற்றில் சிவலிங்கம் காணப்பட்டதாக ஆய்வுக்குழுவின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தயது.
இதன் காரணமாக மசூதி அமைந்திருக்கும் பகுதியில் துணை இராணுவப் பாதுகாப்புப் படை பணியில் ஈடுபட வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அந்த பகுதி சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
English Summary
Varanasi Gyanvapi Mosque case today hearing