காரிலே சிறந்த கார் அம்பேத்காரா அம்பாஸட்டர் காரா? என்று இழிவுபடுத்தியவருக்கு அம்பேத்கர் விருதா?! - Seithipunal
Seithipunal


டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விசிக எம்பி ரவிக்குமாரை தேர்ந்தெடுத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலினுக்கு புரட்சி தமிழகம் கட்சி நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில், "தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் பெருந்தகைகளின் பெயரில் விருது வழங்கி கௌரவிப்பது போற்றுதலுக்குரியது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதை து. ரவிக்குமார் M.P அவர்களுக்கு அரசு அறிவித்துள்ளது குறித்து பல்வேறு சர்ச்சைகள் தற்போது எழுந்துள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் அவரின் பதிவுகள். கட்டுரைகள், கருத்துகள் குறித்து விமர்ச்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக சட்ட மேதை இந்திய அரசியலமைப்பு தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் குறித்த கடந்த காலங்களில் கொச்சைப்படுத்தி அதாவது "காரிலே சிறந்த கார் அம்பேத்கார்" அம்பேத்காரா அம்பாஸட்டர் காரா ? மேலும் இந்திய அரசியல் சட்டம் அம்பேத்கர் எழுதிய நவீன மனுதர்மம் என்றும் இரட்டைமலை சீனிவாசன் அவர்களை தலைமுடியுடன் ஒப்பிட்டு "ரெட்டை சடை" சீனிவாசன் என்றும் பட்டியல் சமூகத்தின் தலைவர்களையும் இழிவு படுத்தி பேசிய நபருக்கு டாக்டர் அம்பேத்கர் விருதா என்ற விமர்சனங்கள் வெகுவாக எழுந்துள்ளன.

எனவே மேற்கண்ட விருது அறிவிப்பினை மறுபரிசீலனை செய்து முழுதகுதியுடைய நபரை தேர்வு செய்து விருதுக்கு சிறப்பு செய்ய உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்" என்று ஏர்போர்ட் த. மூர்த்தி  தெரிவித்துள்ளார்.

முன்னதாக "ரவிக்குமார் சுயசாதி பற்றுடையவர்" என்று கூறி தமிழ்புலிகள் கட்சியும் ரவிக்குமாருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Ravikumar award DMK MK STalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->