குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை விமர்சித்த.. விசிக திருமாவளவன்.!
VCK Thirumavalavan criticized the President candidate Draupadi Murmu
தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக சார்பில் திரவுபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது "பாஜகவால் ஆட்டிவைக்கப்படும் ஒரு சர்க்கஸ் புலிதான் திரௌபதி முர்மு, காட்டு யானை போல அல்லாமல், பாகன் கையில் சிக்கிய யானை போல பாஜக சொல்லும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கையெழுத்து இடுபவர்" என விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
VCK Thirumavalavan criticized the President candidate Draupadi Murmu